தமிழக பாஜகவின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், அந்தப் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இவர் கூட்டணி அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். கட்சியின் மேலிட அனுமதி இன்றி, தன்னிச்சையாகக் கூட்டணி குறித்துப் பேசியதே இந்தப் பதவி பறிப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரசாத் தெரிவித்த கருத்துக்கள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக பாஜக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
