சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை திரிஷா குறித்து நடிகர் பார்த்திபன் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின் போது திரிஷாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டபோது, “இந்த குந்தவையை கொஞ்ச நாள் வீட்டிலேயே உட்கார வைப்பது நல்லது, வெளியே வராமலேயே பார்த்துக்கொள்ளுங்கள்” என்றும், இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்றும் பார்த்திபன் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த மறைமுகத் தாக்குதல் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பார்த்திபனின் இந்த கருத்துக்கு நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஒரு மைக் கிடைத்துவிட்டால் முட்டாள்தனத்தை உரக்கச் சொல்லலாம் என்று அர்த்தமல்ல; தரம் தாழ்ந்து பேசப்படும் வார்த்தைகள் பேசுபவரின் தரத்தையே காட்டும்” என்று அவர் பதிலடி கொடுத்தார்.

“>

 

திரிஷாவின் இந்த காட்டமான பதிலைத் தொடர்ந்து, தான் பேசியது தவறாக நடந்துவிட்டதாகவும், அதற்காக வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறி நடிகர் பார்த்திபன் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.