ஸ்கூலுக்கு போகும்போது புத்தகப் பையைத் தூக்கிச் செல்வதுதான் வழக்கம், ஆனால் பீகாரைச் சேர்ந்த ஒரு குட்டி மாணவன், தனது ஸ்கூல் பேக்குக்குப் பதில் தனது அம்மாவின் ஸ்டைலிஷ் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ள வீடியோ இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
கையில் வாட்டர் பாட்டிலைத் தூக்கிக் கொண்டு, தோளில் அம்மாவின் டிசைனர் பேக்கை மாட்டிக்கொண்டு அந்தச் சிறுவன் நடந்து வரும் அழகே தனி ரகம் தான்.
View this post on Instagram
“புத்தகம் முக்கியம் தான், ஆனா ஃபேஷன் அதை விட முக்கியம்” என்பது போல மிகத் துணிச்சலாகவும், நம்பிக்கையுடனும் அந்த மாணவன் நடந்து வருவதைப் பார்த்த நெட்டிசன்கள், “என்ன ஒரு கான்ஃபிடன்ஸ்.. இது ஏதோ ஃபேஷன் ஷோ சீன் மாதிரி இருக்கு” என அந்தச் சிறுவனைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான வியூஸ்களை அள்ளி வருகிறது.
