ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், தற்போது அந்தப் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. அதாவது இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.

 

இந்தியப் பெருங்கடல் என்பது இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக கடல் வழிப்பாதையாகும். இந்த போர் இந்திய எல்லைக்கு மிக அருகில் வந்துவிட்டது இந்தியப் பொருளாதாரத்திற்கும், கடல் வழி வர்த்தகத்திற்கும் பெரும் சவாலாக அமையும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தகைய சூழல் நீடித்தால் அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மோதல் அதிகரித்து, சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மத்திய அரசின் கவனமும் இந்த விவகாரத்தின் மீது திரும்பியுள்ளது.