ஈரான் – இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ‘ஏரியா 52’ (Area 52) ராணுவ தளத்திற்கு அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வுகள் உலக நாடுகளை அதிரவைத்துள்ளன.
டோனோபா (Tonopah) பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்வுகளும், 16 முறை குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன.
இது வெறும் இயற்கை நிலநடுக்கம் தானா? அல்லது ஈரான் உடனான போரை எதிர்கொள்ள அமெரிக்கா ரகசியமாக நிலத்தடி அணுஆயுத சோதனையில் ஈடுபடுகிறதா? என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
இதனிடையே, இலங்கை அருகே ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்கா தகர்த்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் போரின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
10 நாட்களுக்கு மேல் இந்த மோதல் நீடித்தால் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகும் அபாயம் உள்ளதாக பென்டகன் எச்சரித்துள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் ரகசியமாக ஏதோ ஒரு மெகா பிளானில் இறங்கியிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
