ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்குப் பிறகு அந்த நாடு சரணடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக தனது தாக்குதல்களை முன்பை விடத் தீவிரப்படுத்தி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
இந்த யுத்தம் இன்னும் 4 வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கையுடன் கூறி வந்தாலும், கள நிலவரமோ அப்படியே தலைகீழாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
குறிப்பாக, ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் இன்னும் ஒரு 10 நாட்களுக்குத் தொடர்ந்தால், அமெரிக்காவின் வசம் இருக்கும் அதிமுக்கியமான ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ஆயுதங்களின் இருப்பு தீர்ந்துபோகும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஒருபுறம் ஆயுதத் தட்டுப்பாடு, மறுபுறம் ஓயாத ஈரானின் பதிலடி என இந்த மோதல் நீண்டுகொண்டே செல்வதால், வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
