ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பின் பதவியேற்கப் போகும் அடுத்த தலைவரும் இஸ்ரேலின் “டார்கெட்” பட்டியலில் இருப்பார் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஈரானின் தற்காலிகத் தலைவராக மூத்த மதகுரு அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.
“இஸ்ரேலை அழிக்க நினைக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் ஒழிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ள இஸ்ரேல் அமைச்சர், அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக முடக்கும் வரை ஓயப்போவதில்லை எனச் சூளுரைத்துள்ளார்.
கமேனியின் மரணத்திற்குப் பிறகு ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த நேரடி மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளிடையே பெரும் போருக்கான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
