தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், தனது உரையின் இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு நேரடி சவாலை முன்வைத்தார். “மக்களே.. உங்களை நேசிக்கிற இந்த விஜய் வேணுமா? இல்ல மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜய்யை நம்புறீங்களா இல்ல ஸ்டாலின் சாரை நம்புறீங்களா?” என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் கேட்டார். திமுக அரசின் கடந்த கால செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் ஆவேசமாக முழங்கினார்.
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். விஜய்யின் இந்த நேரடியான மற்றும் துணிச்சலான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் இப்போது விஜய் Vs ஸ்டாலின் என்ற போட்டியாக மாறியுள்ளது.
