மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்த அவர், தற்போது தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொடிக்கம்பங்களை நட்டு, கொடியை ஏற்றி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
வருகிற மார்ச் 5-ஆம் தேதிக்குள் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் இந்த அதிரடி அரசியல் வருகை, தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்களைச் சந்தித்த சசிகலா, தற்போது தனது புதிய கட்சி மூலம் மீண்டும் ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
