‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெளியிட்டால், அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகள் என்றும், அதில் தலையிடும் விதமாகப் படம் எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் படத்தை தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் திரையிட அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள சீமான், திமுக அரசு இதற்கு அனுமதி அளித்திருப்பது வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளார். மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய முயற்சிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
