மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீண்டும் அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளது. வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை குறிவைத்து, ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட போர்க்கப்பலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பணியாளர்களின் நிலை குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையானது ஏற்கனவே உக்கிரம் அடைந்துள்ள வளைகுடா போரை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.