ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ கட்டமைப்பை முற்றிலும் முடக்கும் நோக்கில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் உச்சத் தலைவர் கமேனியின் நெருங்கிய ஆலோசகர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட உயர்நிலை ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெஹ்ரானில் உள்ள ராணுவத் தலைமை அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் பாதுகாப்புத் துறை சார்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் அழிக்கப்பட்டுள்ளனர்.
இது ஈரான் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
