இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பி.வி. சிந்து, போர் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தனது குழுவினருடன் துபாய் விமான நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், “நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால், நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மோசமாகி வருகிறது. நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டது; எனது பயிற்சியாளர் புகை மண்டலத்திற்கு மிக அருகிலேயே இருந்தார். அது மிகவும் பயமுறுத்தும் தருணம்,” எனப் பதிவிட்டுள்ளார்.

“>

துபாய் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த இக்கட்டான சூழல் மாறும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.