ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு தொலைக்காட்சியான IRIB மற்றும் IRNA செய்தி நிறுவனம் இன்று (மார்ச் 1) காலை உறுதிப்படுத்தியுள்ளன.
கமேனியுடன் அவரது மகள், பேத்தி மற்றும் மருமகன் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். “உச்ச தலைவர் தியாக நிலையை அடைந்துவிட்டார்” என அரசு ஊடகம் அறிவித்துள்ள நிலையில், ஈரானில் 40 நாட்கள் துக்க தினம் மற்றும் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
JUST IN: 🇮🇷 Iran confirms the death of Supreme Leader Khamenei’s daughter, granddaughter, son-in-law, and daughter-in-law.
— BRICS News (@BRICSinfo) March 1, 2026
“>
“மிகவும் தீய மனிதர்களில் ஒருவருக்குக் கிடைத்த நீதி இது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் ஓயாது எனவும் எச்சரித்துள்ளார்.
