ஈரான் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி அமீர் ஹடாமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பிற்குப் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிடி (Ahmad Vahidi) அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தளபதியாகப் பொறுப்பேற்ற சில மணிநேரங்களிலேயே, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்; தியாகிகளின் ரத்தம் வீண் போகாது” என அவர் சபதம் செய்துள்ளார். உச்ச தலைவர் அலி கமேனியின் மரணத்தை உறுதி செய்துள்ள ஐ.ஆர்.ஜி.சி, இதற்குப் பதிலடியாக எட்டு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுவது போரின் தீவிரத்தை உணர்த்துகிறது.