ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய “யூதாவின் கேடயம்” தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தனது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்று (மார்ச் 1, 2026) அதிகாலை அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஈரானிய ஆதரவுப் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில், ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 7 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளையும் ஈரான் இலக்கு வைத்துள்ள நிலையில், அபுதாபி விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் வான்வழிப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Authorities in Abu Dhabi are responding to an incident resulting from the interception of a drone that targeted Zayed International Airport. The interception led to falling debris, which resulted in one fatality of an Asian national and seven injuries.
— ABU DHABI AIRPORTS مطارات أبوظبي (@ad_airports) March 1, 2026
“>
சயீத் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில், “விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு அதிகாரிகள் உரியப் பதிலடி கொடுத்து வருகின்றனர்; பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து அபுதாபி வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஈரானின் இந்த ஆக்ரோஷமான பதிலடி மத்திய கிழக்கு பிராந்தியத்தை முழு அளவிலான போரை நோக்கித் தள்ளியுள்ளது.
