தெலுங்கானா மாநிலத்தில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி, பள்ளிக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவரை பைக்கில் ஏற்றிச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவர்கள் சிறுமியைப் பாதியில் வழிமாற்றி, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

வீட்டிற்குத் திரும்பிய சிறுமி நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூற, அவர்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் யாரையும் எளிதில் நம்பிப் பழகவோ, அவர்களுடன் செல்லவோ கூடாது என்று போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.