உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, மளிகைக் கடைக்குச் சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டாக்சி ஓட்டுநர்களான மோகித் (20), பிரதீப் (24) ஆகிய இருவரும் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி காரில் ஏற்றிச் சென்றனர்.
காரில் சென்றபோது, ஒதுக்குப்புறமான பகுதியில் வைத்து சிறுமிக்குக் கட்டாயப்படுத்தி மது கொடுத்து, காரிலேயே வைத்து இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் மகளைக் காணாமல் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய தீவிரத் தேடுதலில் ஒரு காட்டு பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மீட்ட போலீஸார், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
