நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021 முதல் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், அதனால் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு அந்த நடிகையுடன் விஜய் சென்ற புகைப்படங்கள் தமக்கும், தனது குழந்தைகளுக்கும் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியதாக அவர் அந்த மனுவில் போட்டு உடைத்துள்ளார். 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ள இந்த செய்தி விஜய் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரத்தை முன்வைத்து திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் ஒரு நடிகையின் வீட்டில் இருக்கிறார்” என்று பேசியபோது பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மன்னிப்பு கேட்டார்.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், “அன்று நான் சொன்னபோது என்னைத் திட்டினீர்களே, இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று ரசிகர்கள் ஒருபுறம் வாதிட்டாலும், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.