தென்னிந்திய திரையுலகின் ‘எவர்கிரீன்’ கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை திரிஷாவுக்கும், நடிகர் விஜய்க்கும் இடையே காதல் இருப்பதாக நீண்ட நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘லியோ’ படத்திற்குப் பிறகு இந்த வதந்தி இன்னும் சூடுபிடித்தது.

ஆனால், இப்போது இந்த விவகாரத்தில் அதிரடியான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் சர்ச்சை நாயகி பாடகி சுசித்ரா. திரிஷா காதலிப்பது விஜய்யை கிடையாது என்றும், அவர் பின்னால் வேறு ஒரு நபர் இருக்கிறார் என்றும் கூறி ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

திரிஷாவின் காதலர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்றும், அவருக்கும் திரிஷாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும் சுசித்ரா ஒரு பேட்டியில் கொளுத்திப் போட்டுள்ளார்.

ஏற்கனவே விஜய்யின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்துப் பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், சுசித்ராவின் இந்தத் திடீர் அம்பலம் கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.

“விஜய்யை சும்மா பேருக்குத்தான் இழுத்து விடுகிறார்கள், நிஜமான ஆட்டமே வேற” எனச் சுசித்ரா பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. திரிஷா தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.