திரையுலகில் ஒரு ‘பெர்பெக்ட்’ ஜோடியாகக் கொண்டாடப்பட்ட நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினரின் 27 ஆண்டுகால இல்லற வாழ்க்கை, தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் வீதிகளில் ரசிகையாகத் தொடங்கி, கோலிவுட் உச்ச நட்சத்திரத்தின் சரிபாதி துணையாக மாறிய சங்கீதாவின் பயணம், இன்று மீண்டும் லண்டன் வீதிகளிலேயே தனிமையில் வந்து நின்றிருப்பது ஒரு சோகமாக பார்க்கப்படுகிறது.

1996-ம் ஆண்டு ‘பூவே உனக்காக’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யைச் சந்திக்க லண்டனிலிருந்து வந்தவர் சங்கீதா. அந்த முதல் சந்திப்பிலேயே சங்கீதாவின் கண்ணியம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை ஈர்க்க, 1999-ல் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. விஜய்யின் திரைப்பயணத்தில் ஆடைத் தேர்வு முதல் கதையைத் தேர்ந்தெடுப்பது வரை ஒரு நிழலாகவும், பல தியாகங்களைச் செய்த ஒரு சக்தியாகவும் சங்கீதா விளங்கி வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது நீலங்கரை இல்லத்தில் அமைதி நிலவவில்லை எனத் தெரிகிறது. விஜய்யின் அரசியல் வருகை ஒருபுறம் இருக்க, குடும்பத்திற்குள் ஒரு ‘மூன்றாம் நபர்’ நுழைந்ததே இந்தப் பிரச்சனையின் மையப்புள்ளி என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விஜய்க்கும் ஒரு பிரபல நடிகைக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் சங்கீதாவை நிலைகுலையச் செய்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த நடிகை விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை மறைமுகமாகச் சமூக வலைதளங்களில் பதிவிடுவது ஒரே இடத்திலிருந்து தனித்தனியாகப் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்பாடுகள் சங்கீதாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன.

சமீபத்தில் சங்கீதா தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட விவாகரத்து நோட்டீஸ் திரையுலகையே அதிரவைத்துள்ளது. அதில் அவர் முன்வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை: “இருபது ஆண்டுகளாக நான் காத்து வந்த இந்த இல்லறத்தை, ஒரு நடிகைக்காகச் சிதைத்துவிட்டீர்கள்” என அவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.  பிள்ளைகளின் எதிர்காலத்தை விட, அந்த நடிகையின் நட்பு உங்களுக்குப் பெரிதாகிவிட்டது என்ற ரீதியில் தனது தரப்பு நியாயங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, அந்தப் பிரபல நடிகையின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், அவரது குறுக்கீட்டால் மட்டுமே தனது வாழ்க்கை மாறியதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது சங்கீதா தனது பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா முதல், விஜய்யின் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் சங்கீதா தென்படவில்லை. ‘மாஸ்டர்’ பட விழாவே அவர்கள் ஒன்றாகக் கலந்துகொண்ட கடைசி நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் இப்போது தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஒரு பெரும் தொண்டர் படை அவர் பின்னால் நின்றாலும், இத்தனை காலம் அவருக்குப் பின்னால் நின்ற சங்கீதா இன்று அவருடன் இல்லை. இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.