டெல்லியில் உள்ள ஜப்பானீஸ் பூங்காவில் (Swarn Jayanti Park), காதலி என்று சொல்லப்படும் ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பூங்காவிற்கு நடைப்பயிற்சி வந்த ஒருவர், இந்தத் தடியடியை தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோவில், “நான் பக்கத்து பெஞ்சில் தான் உட்கார்ந்திருந்தேன், இந்த இளைஞர் அந்தப் பெண்ணை சுமார் 30 முதல் 40 முறைக்கு மேல் அடித்துவிட்டார்” என்று அவர் வேதனையுடன் விவரித்துள்ளார்.

​சுற்றி இருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையிலும், அந்த இளைஞர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பெண்ணை மீண்டும் மீண்டும் தாக்குகிறார். இந்த “டாக்ஸிக்” (Toxic) உறவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது தனிப்பட்ட பிரச்சனை அல்ல, இது ஒரு கிரிமினல் குற்றம்” என்று டெல்லி போலீஸாரை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். அடி வாங்கிய பிறகும் அந்தப் பெண் அங்கேயே அமர்ந்திருப்பது சுயமரியாதை எங்கே போனது என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.