தலைநகர் டெல்லியில், நடுரோட்டில் காதலன் தனது காதலியைப் பளார் பளாரென 30 முதல் 40 முறை அறைந்த கொடூரச் சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பகல் வெளிச்சத்தில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணின் முகத்தில் தொடர்ந்து அறைந்து கொண்டே இருக்கிறார்.

சுற்றி நின்றவர்கள் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, “இந்தக் கொடூரத்திற்குப் பிறகும் அந்தப் பெண் அவனுடன் தான் இருக்கிறாரா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் அந்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.