மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சாலைகளில் சுற்றித் திரியும் காட்டுக்காளைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு பெண்ணை வெறித்தனமாகத் தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரெனப் பாய்ந்த அந்தக் காளை, அவரைத் தூக்கி வீசி கொம்புகளால் குத்தி சிதைத்துள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

படுகாயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாக்பூர் மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற மோகாட் மாடுகளைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுமக்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.