மும்பை நகரின் உயிர்நாடியான லோக்கல் ரயிலில், இடம்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கல்யாண் ரயில் நிலையம் போர்க்களமாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டம் நெரிசல் மிகுந்த லோக்கல் ரயிலில், சரியாக நிற்கக்கூட இடமில்லாத ஒரு டீன்-ஏஜ் சிறுமிக்கும், அங்கிருந்த ஒரு பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Daily Dhanushdhari (@dhanushdharinews)

இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தப் பெண், அனைவர் முன்னிலையிலும் அந்தச் சிறுமியின் தலைமுடியைப் பிடித்துக் கொடூரமாக இழுத்துத் தாக்கியுள்ளார்.

ரயிலுக்குள் தொடங்கிய இந்த மல்லுக்கட்டு, கல்யாண் ஸ்டேஷன் பிளாட்பாரத்திலும் நீடித்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் WWE மல்யுத்த வீரர்களைப் போலத் தாக்கிக்கொண்ட காட்சியை அங்கிருந்த பயணிகள் செல்போனில் படம்பிடித்து இணையத்தில் பகிர, அது தற்போது செம வைரலாகி வருகிறது.

ரயில்வே போலீசார் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்திய போதிலும், பொது இடத்தில் பெண்கள் இப்படி ரகளையில் ஈடுபட்டது சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.