பாகிஸ்தானில் நீண்ட தூரம் செல்லும் சொகுசு பேருந்து ஒன்றில் நடந்த விசித்திரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கப் பயண வலைப்பதிவர் ஒருவர் அந்தப் பேருந்தில் பயணம் செய்தபோது, ஊழியர் ஒருவர் கையில் கேமராவுடன் வந்து ஒவ்வொரு பயணிகளையும் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சுமார் 6 மணி நேரப் பயணத்தின் போது நடந்த இந்தச் செயலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது, நான் இதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், அந்தப் பேருந்தின் ஏசி வசதி மற்றும் குறைந்த கட்டணம் ஆகியவற்றையும் அவர் பாராட்டியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் மத்தியில் பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. “ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பயணிகளை அடையாளம் காண இது உதவும்” என்று ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்க, “அனுமதியின்றி பயணிகளை வீடியோ எடுப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமையைப் பாதிக்கும் செயல்” என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
அதே நேரத்தில், பெண் ஊழியரை அந்த வலைப்பதிவர் வீடியோ எடுத்தது சரியா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். இதனால், ஒரு சாதாரண பேருந்துப் பயணம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
