ஒடிசா மாநில சுரங்கத் துறை இணை இயக்குனர் தேபப்ரதா மொஹந்தி என்பவர் வெறும் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிசா ஊழல் தடுப்புப் பிரிவு வரலாற்றிலேயே ஒரே சோதனையில் இவ்வளவு பெரிய தொகை சிக்கியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இது தவிர தங்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் அவரிடமிருந்து கண்டறியப்பட்டுள்ளன.
இது போன்ற ஊழல் வேட்டைகள் இந்தியாவெங்கும் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த காலங்களில் ஜார்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் 35 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்தில் முன்னாள் அமைச்சரின் தோழி வீட்டில் 50 கோடி ரூபாயும், கர்நாடக எம்.எல்.ஏ மகனிடம் 8 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் நாட்டை உலுக்கின.
2025-ல் ஹரியானாவிலும் ஒரு அதிகாரியிடம் 5 கோடி ரூபாய் சிக்கியது. அரசு ஊழியர்களின் வீடுகளில் மூட்டை மூட்டையாகப் பணம் சிக்கும் இச்சம்பவங்கள், ஊழலின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
