எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் புரட்சித் தமிழகம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியின் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, வரும் தேர்தலில் அதிமுகவிற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீபகாலமாகப் பல்வேறு சிறிய கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்தப் புதிய சேர்க்கை அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.