தெலங்கானா மாநிலம் காமரெட்டியில் நடந்த ஒரு திருமணம், தற்போது சமூக வலைதளங்களில் ‘டாப் ட்ரெண்டிங்’ ஆக மாறியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த விஜய் மற்றும் வினய் என்ற இரட்டைச் சகோதரர்கள், காமரெட்டியைச் சேர்ந்த கீர்த்தனா மற்றும் கீர்த்தி என்ற இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். மேடையில் மணமகன், மணமகள் என நான்கு பேருமே ஒரே உருவ ஒற்றுமையுடன் இருந்ததைப் பார்த்த உறவினர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

​இந்தத் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இது நிஜமான ‘ஜீன்ஸ்’ படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். “பிரசாந்த் – ஐஸ்வர்யா ராய் நடித்த படத்தில் வருவது போலவே நிஜத்திலும் நடந்திருக்கிறதே” என வியக்கும் மக்கள், இந்த புதுமணத் தம்பதிகளுக்குத் தங்களது வாழ்த்துக்களை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.