முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு சந்தித்த கடந்த 11 தேர்தல்களிலும், ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடைத்தேர்தல்கள் முதல் பொதுத்தேர்தல்கள் வரை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய தேர்தல் சூழலிலும் அதே நிலைமைதான் நீடிக்கிறது என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் மிக ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். அதிமுக-வின் தோல்விகளுக்கு எடப்பாடியாரின் தவறான தலைமையே காரணம் என்பது போலவும், வரும் தேர்தலிலும் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள் என்பது போலவும் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
