சமூக வலைதளங்களில் எப்போதுமே நிஜத்தை விட நிழல் உலகக் காட்சிகள் (AI) அதிகம் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு கோழிக்குஞ்சை பாம்பிடமிருந்து எலிகள் காப்பாற்றும் வீடியோ இப்போது இணையத்தை அதிர வைத்துள்ளது. ஒரு கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போதே, பக்கத்திலிருந்த பொந்திலிருந்து திடீரென வெளிப்பட்ட ஒரு பாம்பு, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு குஞ்சைத் கவ்விக்கொண்டு பொந்துக்குள் இழுத்துச் செல்கிறது. பதறிப்போன தாய் கோழியால் அந்தப் பாம்பைத் தடுக்க முடியவில்லை.

​ஆனால், அந்தப் பொந்துக்குள் நடந்த அதிசயம் தான் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. அங்கே ஒரு கூட்டமே கூடி பிளான் போட்டது போல, பல எலிகள் ஒன்று சேர்ந்து அந்தப் பாம்பைத் தாக்குகின்றன. ஒரு எலி பாம்பின் கவனத்தைத் திசைதிருப்ப, மற்றொரு எலி குஞ்சைப் பத்திரமாக மீட்டு மீண்டும் தாய் கோழியிடமே கொண்டு வந்து சேர்க்கிறது. ‘காவலன் இருக்கையில் கவலை எதற்கு?’ என்பது போல, குஞ்சுக்கு எலிகள் தேவதூதர்களாக வந்து உதவிய இந்த வீடியோ, பார்ப்பதற்கு நிஜம் போல இருந்தாலும், இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.