ராய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நடந்த பயங்கரமான சம்பவம் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. வாலிபர் ஒருவர் பெட்ரோல் பங்க் அருகே சிகரெட் பிடித்துள்ளார். அவரது நண்பர் இதைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர் தான் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த பைக்கிலேயே தீயை வைத்துள்ளார்.
रायपुर में जिंदगी से खिलवाड़… पेट्रोल पंप के पास जलाई सिगरट, दोस्त ने मना किया तो पेट्रोल भरवाते हुए बाइक में लगाई आग, पंप में भी लगी भीषण आग, पंप कर्मचारी की सतर्कता से बड़ा हादसा टला… वीडियो CCTV में हुआ कैद#CCTV #PetrolPump #ViralVideo #AajTakSocial #ATReel pic.twitter.com/ZI90v3Nu0Q
— AajTak (@aajtak) February 19, 2026
கண் இமைக்கும் நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய, பெட்ரோல் பங்க் ஊழியர்களின் மின்னல் வேகச் செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சிசிடிவி-யில் சிக்கி வைரலாகி வருகிறது. இந்த காணொளி அடிப்படையாக வைத்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
