பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால் இங்கே ஒரு பெண் சிறிய பாம்பு ஒன்றைத் தனது கையில் வைத்துக்கொண்டு மிகவும் சாதாரணமாக விளையாடும் காட்சி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அந்தப் பாம்பு அப்பெண்ணை இரண்டு முறை கடித்த போதிலும், அவர் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் விளையாட்டைத் தொடர்ந்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மனிதர்களைத் தாக்கினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டு. இத்தகைய சூழலில், விபரீதம் புரியாமல் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது மற்றவர்கள் முன் ‘கெத்து’ காட்டுவதற்காகவோ பாம்புகளுடன் விளையாடுவது உயிருக்கே உலையாக முடியும் என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
