ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ பள்ளத்தாக்கில் வாழும் ‘முர்சி’ (Mursi) பழங்குடியின மக்கள், உலகின் மிகவும் ஆபத்தான மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். நவீன உலகத்தோடு தொடர்பில்லாத இவர்களது ஆக்ரோஷமான குணமும், வினோத உடலமைப்பும் காண்போரை அதிர வைக்கிறது. குறிப்பாக, இந்த இன ஆண்கள் தங்களது வீரத்தை நிரூபிக்க ‘டோங்கா ஃபைட்’ எனப்படும் தடியடி சண்டையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்வது இவர்களது முக்கிய மரபாகும்.

இந்த பழங்குடியின பெண்களின் அழகுப் பண்பாடு மிகவும் விசித்திரமானது. பெண்கள் தங்களது கீழ் உதட்டில் பெரிய வட்ட வடிவிலான தட்டை (Lip Plate) அணிந்து கொள்கிறார்கள். உதட்டின் துளையை மெல்ல மெல்லப் பெரிதாக்கி, இந்தத் தட்டின் அளவை அதிகரிப்பார்கள். எந்தப் பெண்ணின் உதட்டில் இருக்கும் தட்டு மிகப் பெரியதோ, அவரே அந்த சமூகத்தில் மிகுந்த அழகியாகவும் மரியாதைக்குரியவராகவும் கருதப்படுகிறார். வெளிநாட்டவர் எவரேனும் இவர்களது பகுதிக்குள் நுழைந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால், இன்றும் இவர்கள் மர்மமானவர்களாகவே வாழ்கின்றனர்.