மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள சக்ராலே பகுதியில், வேகமாக வந்த கார் ஒன்று பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த பைக் மற்றும் பாதசாரி மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதின் சிவாஜி பவார் என்பவர் தனது தாயுடன் பைக்கில் பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிதின், அவரது தாய் சாயா பவார் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பாதசாரி என மொத்தம் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தின் கோரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்போரை உலுக்கியுள்ளது.
தகவலறிந்து வந்த ஈஸ்வர்பூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு கராட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் கட்சிரோலியைச் சேர்ந்த லிமே கர்சே என்பது தெரியவந்தது.
सांगली में तेज रफ्तार कार का कहर
सांगली जिले के साखराले इलाके में बुधवार दोपहर एक तेज रफ्तार कार ने सड़क किनारे खड़ी बाइक और एक पैदल जा रहे व्यक्ति को टक्कर मार दी। इस हादसे में तीन लोग घायल हो गए। घटना ईश्वरपुर–ताकारी रोड पर पेट्रोल पंप के पास हुई और पूरी वारदात पास लगे… pic.twitter.com/kMdqsCaAx5
— NDTV India (@ndtvindia) February 19, 2026
“>
அதிவேகமாக கார் ஓட்டியதே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா அல்லது கவனக்குறைவாகச் செயல்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
