சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு இளைஞர் தான் செல்ல வேண்டிய ரயிலைத் தவறவிட்டதால் கடும் ஆத்திரமடைகிறார். பொதுவாக ரயிலைத் தவறவிட்டால் அடுத்த ரயிலுக்காகக் காத்திருப்பது அல்லது மாற்று வழியைத் தேடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த நபர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், ரயில் நிலையத்தில் இருந்த பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் அங்கிருந்த அறிவிப்புப் பலகைகள் மற்றும் உடைமைகளை அடித்து நொறுக்கும் அவரது செயல் அங்கிருந்தவர்களையும், தற்போது இந்த வீடியோவைப் பார்ப்பவர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“>

மேலும் “கோபம் ஒருவரை எவ்வளவு தரம் தாழ்ந்து நடக்க வைக்கும் என்பதற்கு இதுவே சாட்சி” என்றும், “பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய இவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றும் மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. ஒரு சிறிய கவனக்குறைவால் ஏற்படும் கோபம், சட்ட ரீதியான சிக்கலில் அவரை கொண்டு போய் நிறுத்தியுள்ளது.