சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை உறைய வைக்கிறது. ‘தண்ணீரின் அரக்கன்’ என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்ட முதலை, கரையில் நின்றிருந்த ஒரு விலங்கை மின்னல் வேகத்தில் தாக்கி, அடுத்த சில நொடிகளில் முழுமையாக விழுங்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

மேலும் இயற்கையின் கொடூரமான வேட்டைத் திறனைப் பறைசாற்றும் இந்த வீடியோ, நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும் ஆபத்து எந்த அளவுக்குத் தீவிரமானது என்பதை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவில், தண்ணீருக்குள் பதுங்கியிருக்கும் முதலையின் அசைவு சிறிதும் தெரியாத வண்ணம் மிக நுணுக்கமாக வேட்டையாடுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chuckey | Reptile Keeper (@madbioreptiles)

“>

இந்நிலையில் விலங்கு தண்ணீர் குடிக்க முற்படும் அந்த ஒரு வினாடியில், முதலை தனது வலிமையான தாடைகளால் அதைப் பிடித்து நீருக்குள் இழுத்துச் செல்கிறது. இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.