2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

திலக் வர்மா அவுட்டான பிறகு, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய முழுத் தயார் நிலையில் இருந்தார். ஆனால், அவர் களத்திற்கு வர முயன்றபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவரை நிறுத்திவிட்டு சிவம் துபேவை களமிறங்குமாறு சைகை காட்டினார்.

இதனால் சற்று ஏமாற்றமடைந்த பாண்டியா, “நான் வரவா அல்லது துபேவா?” என்று சைகையிலேயே கேப்டனிடம் கேட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேப்டன் சூர்யகுமார் யாதவின் இந்த முடிவு ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. களமிறங்கிய சிவம் துபே, நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களைத் திணறடித்தார். வெறும் 25 பந்துகளில் அதிரடியாக அரைசதம் விளாசி, தனது திறமையை நிரூபித்தார்.

பாண்டியாவுக்கு முன்னதாக துபேவை அனுப்பிய கேப்டனின் வியூகம் சரியாக அமைந்ததால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. இதன் மூலம் குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியிலும் இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.