செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும், மாறாக அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் என்விடியா நிறுவனத் தலைவர் ஜெய் பூரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பேசிய அவர், AI தொழில்நுட்பம் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித் திறனைப் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும்போது இன்னும் கூடுதலான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, AI-யை ஒரு சவாலாகப் பார்க்காமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு கருவியாகவே பார்க்க வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
