ஆசையாய் கொடுத்த ஒரு முத்தம், ஒரு பிஞ்சு குழந்தையின் கண்பார்வையையே பறித்த கொடுமை இங்கிலாந்தில் நடந்துள்ளது. மிச்சல் சாய்மன் என்ற பெண்ணின் இரண்டு வயது ஆண் குழந்தைக்கு இடது கண்ணில் ஏற்பட்ட சிறிய தடிப்பு, நாளடைவில் பெரிய தொற்றாக மாறியுள்ளது. பரிசோதித்த மருத்துவர்கள், யாரோ முத்தமிட்டதன் மூலம் பரவிய ‘ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ்’ (Herpes Simplex) என்ற வைரஸ் தான் குழந்தையின் கண்பார்வை பறிபோகக் காரணம் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளனர். விளையாட்டாகக் கொடுத்த ஒரு முத்தம் இப்படி ஒரு விபரீதத்தை உண்டாக்கும் என்று அந்தத் தாய் கனவிலும் நினைக்கவில்லை.

​”முத்தம் கொடுக்கும் முன் யோசியுங்கள்” என்று கண்ணீரோடு மிச்சல் சாய்மன் இந்தத் தகவலை உலகெங்கும் உள்ள பெற்றோர்களிடம் பகிர்ந்து வருகிறார். குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கும் போது அவர்கள் உடலில் எளிதாக வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், தெரியாத நபர்களோ அல்லது கிருமி தொற்று உள்ளவர்களோ குழந்தைகளை நெருங்க அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்தத் தாயின் இந்த வேதனையான பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெற்றோர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.