இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தமிழக அரசு கடன் வாங்கிப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதைச் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். “கடன் வாங்கித் திட்டங்களைச் செயல்படுத்துவதால் அரசுக்கு நீண்ட கால அடிப்படையில் பெரும் இழப்புதான் ஏற்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.
“மாற்றம் என்பது வெறும் மேடைப் பேச்சாகவோ, கவர்ச்சியான சொல்லாகவோ மட்டும் இருந்துவிடக் கூடாது; அது செயலில் காட்டப்பட வேண்டும்” என்று கூறினார். அரசு ஊழியர்கள் முதல் அடித்தட்டு உழைப்பாளிகள் வரை அனைவரும் தங்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நிதி மேலாண்மையில் அரசு தோல்வியடைந்துள்ளதாகச் சாடினார்.
