சேலத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி மணிகண்டன், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக எழுந்த புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போதைய தவெக கட்சி பெண்களை வேட்டையாடும் காமுகர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெக நிர்வாகியின் இந்த அநாகரீகச் செயல் ஒட்டுமொத்தப் பெண்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கொந்தளித்துள்ளார்.

​மேலும் தவெக தலைவர் விஜய்க்கு நேரடி சவால் விட்டுள்ள நயினார் நாகேந்திரன், “தனது சொந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்தே பெண்களைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் இனி என்ன படையை உருவாக்கப் போகிறார்?” என்று மேடையிலேயே நறுக் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக நிர்வாகி கைது விவகாரமும், அதற்குப் பதிலடியாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ள இந்த ஆக்ரோஷமான குற்றச்சாட்டும் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.