தமிழகத்தில் உள்ள ஆவின் மையங்களில் முன்பு போல பச்சை நிற ‘கிரீன் மேஜிக்’ பால் பாக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றும், அதன் விற்பனை திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை அதிரடி புகார் தெரிவித்துள்ளார். “கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று தவெக அரசு யாரை ஏமாற்ற இப்படிப்பட்ட பொய்யான விளக்கத்தை அளிக்கிறது?” என்று அவர் மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆவின் மேஜிக் பால் தட்டுப்பாடால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்.
தமிழக அரசு உடனடியாகப் பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் ஆவின் பால் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் உருப்படியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் அதிகம் விரும்பும் பச்சை நிற கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளை மீண்டும் போதுமான அளவுக்கு விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் தவெக அரசுக்கு அவர் நேரடி நெத்தியடி கொடுத்துள்ளார். அண்ணாமலையின் இந்த ஆவின் பால் அட்டாக், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
