தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலையும் மீறி, ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையில் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் உறுதியாக உள்ளனர்.
நேற்று ‘அச்சமில்லை’ என்று பதிவிட்டிருந்த மாணிக்கம் தாகூர், இன்று (பிப். 18) காலை தனது ‘X’ தளத்தில் பாரதியாரின் புகழ்பெற்ற “தேடிச் சோறுநிதம் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள் பேசி…” என்ற பாடலைப் பதிவிட்டுள்ளார். இந்தப் பாடலின் முடிவில் வரும் “நினைத்த காரியம் கை கூடும்” என்ற வரிகள் மூலம், ஆட்சியில் பங்கு என்ற தனது இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
இது திமுக தலைமையையும், மாநில காங்கிரஸ் தலைமையையும் ஒருசேர அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
காலை வணக்கம் pic.twitter.com/d3naBChaBo
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 18, 2026
“>
