கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் தங்கும் விடுதிக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த கழிவறையில் ரகசிய கேமரா மூலம் அந்த நடிகை ஆபாசமாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வீடியோவை வைத்து மர்ம நபர்கள் அந்த நடிகையைத் தொடர்பு கொண்டு, “பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

தனது மானத்திற்கு அஞ்சி அந்த நடிகை சுமார் 5 லட்சம் ரூபாய் வரை அந்த கும்பலுக்குப் பணத்தை வாரி வழங்கியுள்ளார். ஆனால், அதன்பிறகும் மீண்டும் மீண்டும் அந்த கும்பல் பணத்தைக் கேட்டு மிரட்டியதோடு, நடிகையின் தனிப்பட்ட தகவல்களைச் சமூக வலைதளங்களில் கசிய விட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த நடிகை, இனி பொறுக்க முடியாது என பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார்.

தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த ரகசிய கேமரா கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர். சினிமா படப்பிடிப்புத் தளங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் நடிகைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்ற மிகப்பெரிய கேள்வியைத் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.