இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பலரும் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை நெஞ்சை பதற வைக்கிறது. அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் நடுவே ரயிலுக்கு நேராக மிக வேகமாக ஓடி வருகிறார்.
அவருக்கு நேர் எதிரே மின்னல் வேகத்தில் ஒரு ரயில் சீறிப்பாய்ந்து வருகிறது. மோதப்போகும் கடைசி நொடியில் அந்த வாலிபர் செய்த அந்த சாகசம் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
View this post on Instagram
“லைக்குகளுக்காக இப்படியா உயிரோடு விளையாடுவது?” என நெட்டிசன்கள் ஒருபுறம் விளாசினாலும், இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. என்னதான் சாகசமாக இருந்தாலும், ஒரு நொடி பிசகினாலும் உயிர் போயிருக்கும் என பலரும் இந்த அபாயகரமான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
