இன்றைய நவீன உலகில் கைநிறைய சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் வேலை என்பது பலரின் கனவாக இருந்தாலும், அதன் மறுபக்கம் எவ்வளவு கொடூரமானது என்பதை ஒரு இளம்பெண்ணின் வைரல் வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 24 வயதே ஆன அந்த பெண், வேலை அழுத்தம் மற்றும் மன உளைச்சலால் தான் அனுபவிக்கும் வேதனைகளை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
“வேலையை இழப்பதை விடவும், ஒரு மெஷின் போல மாறிவிட்ட என்னை நானே கண்ணாடியில் பார்ப்பது தான் அதிக பயமாக இருக்கிறது” என அவர் குமுறியுள்ளார். தூக்கமில்லாத இரவுகள், எப்போதும் ஒருவித பதற்றம், குறைந்து போன தன்னம்பிக்கை என கார்ப்பரேட் வாழ்க்கை தன்னை உள்ளுக்குள் சிதைத்து வருவதாக அவர் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
View this post on Instagram
“பிழைப்புக்காகவும், வீட்டு வாடகை கட்டவும், குடும்பச் சுமையைச் சுமக்கவும் பிடிக்காத வேலையைச் செய்யும் லட்சக்கணக்கான இளைஞர்களின் குரலாகத் தான் இது ஒலிக்கிறது” என இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் தங்களது கவலைகளைக் கமெண்ட்களில் கொட்டி வருகின்றனர்.
‘ஒர்க் – லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே இருப்பதாகவும், மனநலத்தை விட வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த சிஸ்டம் மாற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
