விளையாட்டாக சேகரிக்கப்படும் பொருட்கள் சில நேரங்களில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கோடிகளை அள்ளிக் கொடுக்கும் என்பதற்கு இந்த போக்கிமான் கார்டு ஒரு சிறந்த உதாரணம். 1990-களில் தயாரிக்கப்பட்ட மிகவும் அரிதான என்ற போக்கிமான் கார்டு, தற்போது சுமார் ரூ.150 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இது உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன போக்கிமான் கார்டு என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. 1998-ல் ஒரு வரைபடப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த கார்டு, தற்போது சேகரிப்பாளர்கள் மத்தியில் தங்கத்தை விட மதிப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
இதன் உரிமையாளரான பிரபல யூடியூபர் மற்றும் மல்யுத்த வீரர் லோகன் பால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதனை சுமார் ரூ.47 கோடிக்கு வாங்கியிருந்தார். தற்போது அதனை பல மடங்கு லாபத்திற்கு விற்று, முதலீட்டில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார்.
மேலும் “சின்ன கல்லு பெத்த லாபம்” என்ற பழமொழிக்கு ஏற்ப, வெறும் காகித அட்டையாகத் தெரியும் இந்த கார்டு, இன்று ஒரு மிகப்பெரிய சொத்தாக உருவெடுத்துள்ளது. பழங்கால பொருட்கள் மற்றும் அரிய சேகரிப்புகள் மீது முதலீடு செய்வது எவ்வளவு லாபகரமானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது.
