அமெரிக்காவில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஜெனிஃபர் ஷ்ரோடர் என்ற பெண்மணி, தனக்கு வரவேண்டிய பதவி உயர்வை அனுபவமே இல்லாத 25 வயது பட்டதாரிப் பெண்ணுக்கு வழங்கிய நிறுவனத்திற்கு எதிராக அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அந்தப் பெண்ணுக்குத் தொழிலைக் கற்றுத்தருமாறு நிர்வாகம் கேட்டபோது, “என்னை விடத் தகுதியானவர் என்று நீங்கள் தேர்வு செய்தவருக்கு, என்னால் பயிற்சி அளிக்க முடியாது” என்று அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
நிர்வாகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அவர் மீது அழுத்தம் கொடுத்தும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்து பணியிலிருந்து விலகினார்.
ஜெனிஃபர் வெளியேறிய பிறகு, அந்தப் பதவிக்கு வந்த இளம்பெண் வெறும் நான்கு மாதங்களிலேயே வேலையை விட்டுச் சென்றுவிட்டார். வயது பாரபட்சம் மற்றும் அனுபவமுள்ள ஊழியர்களைச் சுரண்டுவதற்கு எதிராக ஜெனிஃபர் குரல் கொடுத்தது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
“>
40 வயதைக் கடந்த 99 சதவீத ஊழியர்கள் பணியிடங்களில் இதுபோன்ற கசப்பான அனுபவங்களைச் சந்திப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது ஜெனிஃபர், 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சமூக ஆர்வலராகப் பரிணமித்துள்ளார்.
