சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான மற்றும் நகைச்சுவையான காணொளிகள் வைரலாகி வரும் நிலையில் தற்போது திருவிழா ஒன்றில் சோலே பட்டூரா தயாரிக்கும் நபர் ஒருவரின் காணொளி இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்து சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த உணவகத்தில் மிக நீண்ட மாவு உருண்டையை எடுத்து அதனை மிகப்பெரிய அளவில் தட்டையாக மாற்றும் அந்த நபர் மிகவும் நம்பிக்கையுடனும் ஸ்டைலாகவும் அதனை எண்ணெய்க் கொப்பரைக்குள் போட முயல்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rahul Mondal (@rahul_mondal_01)

பார்ப்பவர்கள் அனைவரும் ஒரு சாதனை அளவிலான உணவைத் தயாரிக்கப்போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மிகப்பெரிய மாவு உருண்டை கொப்பரைக்குள் நுழைய முடியாமல் வெளியே விழுந்தது. தொடக்கத்தில் காட்டிய அதீத தன்னம்பிக்கை கடைசியில் தோல்வியில் முடிந்த இந்த நகைச்சுவைக் காட்சி தற்போது பலராலும் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.